கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’…..!!

16 November 2020, 7:41 pm
yellow alert -updatenews360
Quick Share

கேரள மாநிலத்தில் வயநாடு, கோழிகோடு உள்பட 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

Hyderabad Rain- Updatenews360

இந்நிலையில் கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 20

0

0