உன்னாவ் சம்பவம்..! ஆதித்யநாத் உடனே ராஜினாமா செய்யுங்க..! ஆவேசமான அகிலேஷ் யாதவ்..!

5 December 2019, 9:04 pm
Quick Share

லக்னோ: உன்னாவ் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து, யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஓராண்டுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு இளம்பெண் ஒருவர் ஆளானார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் அந்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உன்னாவ் சம்பவத்துக்கு பிறகு, ஆட்சியில் இருக்கும் தார்மீக பொறுப்பை யோகி ஆதித்ய நாத் இழந்து விட்டார். ஆட்சியில் நீடிக்க அவருக்கு இனி அதிகாரமில்லை.

அவரும், அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். நீதிமன்றம் இந்த வழக்கில் உடனடியாக தலையிட வேண்டும். முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் பதவி விலக வேண்டும் என்றார்.