ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் : நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!!

27 January 2021, 8:31 pm
Track Youth Survive - Updatenews360
Quick Share

ஆந்திரா : ராஜமுந்திரியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் உள்ள தாடிதோட்டத்தில் இருந்து ரம்பா ஊர்வசி வரை செல்லும் ரயில்வே டிராக்கில் ரயில் வருவதற்கு முன்பு கேட் மூடப்பட்டது.
ரயில்வே கேட்டில் இருந்து பொதுமக்கள் சாலையை கடந்து வந்தனர்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் முயற்சி செய்தபோது அப்போது ரயில் அதி வேகமாக வந்தது.

உடனடியாக அந்த இளைஞர் தனது பைக்கை அங்கேயே விட்டுவிட்டு சற்று விலகி வந்தார். இளைஞர் விலகிய சிறிது நேரத்திலேயே ரயில் வேகமாக சென்று பைக் மீது மோதி சென்றது. இதில் பைக் சுக்குநூறாக இளைஞர் கண்முன்னே உடைந்து சிதறியது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது ராஜமுந்திரியில் வைரலாக பரவி வருகிறது.

ஆபத்தை உணராமல் மூடப்பட்ட ரயில்வே கேட்டை கடக்க முயன்று ஏற்பட்ட விபத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரயில்வே போலீசார் இதனை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0