65 வயதுக்காரர் மீது காதல் கொண்ட 25 வயது இளம்பெண்… வெளியான திருமணப் புகைப்படம்… ஆதங்கப்படும் சிங்கிள்ஸ்கள்!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 2:13 pm
karnataka mrg - updatenews360
Quick Share

65 வயது முதியவரை 25 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்ளது கொண்ட நிகழ்வு கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தின் சந்தேமவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகனா. 25 வயதான இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், ஒரு வருடமே வாழ்ந்த நிலையில், மேகனாவின் கணவர் வீட்டை விட்டு வெளியேறினார். மாயமான அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மேகனா தனியாக வசித்து வந்துள்ளார்.

இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே இருப்பது என்று தனிமையை உணர்ந்த மேகனா 2வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அந்த சமயம் சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா என்ற என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், நாளடைவில் சங்கரண்ணா மீது மேகனா காதல் வயப்பட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கூறியுள்ளார். மேகனாவின் காதலை ஏற்றுக் கொண்ட சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதனிடையே, தனது திருமண புகைப்படத்தை மேகனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த பலரும், ஆச்சரியப்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து கூறி வருகின்றனர்.

குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்கள் மேகனாவின் செயலுக்கு ஆதங்கப்பட்டு வருகின்றனர். 90களில் பிறந்தவர்களுக்கு பெண் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், இது நியாயமா..? என்று கிண்டலாகவும், நகைச்சுவையாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 341

0

0