கண்ணில் மிளகாய் பொடி தூவி 22 நாட்களாக காதலி பாலியல் வன்கொடுமை: கேரளாவை உலுக்கிய 32 வயது சைக்கோ இளைஞன் மார்ட்டின் ஜோசப் கைது..!!

11 June 2021, 1:55 pm
Quick Share

திருச்சூர்: கேரளாவில் காதலியை 22 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து கண்ணில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திரிச்சூரை சேர்ந்த ஷேர்மார்க்கெட் தொழிலதிபராக இருந்து வந்த மார்டின் ஜோசப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணமாகமலே லிவ் இன் உறவில் கொச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர்.

சில நாட்களில் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள், சண்டை ஏற்படவே இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊர் சென்றுள்ளார். ஆனால் திரும்ப வராவிட்டால் இருவரும் இணைந்து எடுத்த நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடுவதாக மார்டின் ஜோசப் மிரட்டியுள்ளார். அதற்கு பயந்து இளம்பெண் மீண்டும் கொச்சி செல்ல அங்கு விபரீதம் நடந்துள்ளது.

இளம்பெண்ணை ஒரு மாத காலமாக வீட்டுக்குள் அடைத்து வைத்த மார்டின் ஜோசப் அவர் கண்ணில் மிளகாய் பொடி தூவுதல், உடம்பில் வெந்நீரை ஊற்றுதல் என பல சித்திரவதைகள் செய்துள்ளான். மேலும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான்.

ஒருவழியாக அங்கிருந்து தப்பிய இளம்பெண் சொந்த ஊர் திரும்பி போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எர்ணாகுளம் மாவட்டம், காகநாட்டில் இருந்து திருச்சூருக்கு தப்பிச் சென்ற சைக்கோ இளைஞன் மார்ட்டின் ஜோசப்பை காட்டுக்குள் பொறுத்தப்பட்ட கேமிரா மூலம் கண்காணித்து 3 நாட்கள் தீவிர தேடுதலுக்கு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள பெரமங்கலம் என்ற இடத்தில் வனப்பகுதியில் வைத்து மார்ட்டின் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவனுடன் தான்ர்ர்ஷ், ஸ்ரீராக், ஜான் ஜோய் ஆகிய மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இன்று இவர் கொச்சி கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சைக்கோ இளைஞன் மார்ட்டின் எந்த வேலைக்கும் செல்லாத நிலையில், பிஎம்டபிள்யூ காரில் வலம் வந்து பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

Views: - 171

0

0