மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகைக்குள் சிக்கிய இளைஞர் : 2 நாட்களாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 1:21 pm
Youth Trap in Cave - Updatenews360
Quick Share

மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகையில் விழுந்து செவ்வாய்க்கிழமை முதல் சிக்கி கொண்டிருக்கும் வாலிபரை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெட்டி பேட்டையை சேர்ந்தவர் ராஜு. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அந்த பகுதியில் உள்ள சிங்கராயபள்ளி வனத்தில் இருக்கும் மலை ஒன்றின் மீது ஏறி தேன் சேகரிக்க முயன்றார் ராஜு.

அப்போது அவருடைய பையில் இருந்த செல்போன் தவறி கீழே இருக்கும் குகையில் விழுந்து விட்டது. செல்போன் விழுந்ததை கவனித்த ராஜு அதனை எடுப்பதற்காக குகையில் இறங்கி சிக்கி கொண்டார். ஆனால் அதன்பின் அவரால் வெளியே வர இயலவில்லை.

இந்த நிலையில் இரவு வீடு திரும்பாத ராஜுவை குடும்ப உறுப்பினர்கள் நேற்று முழுவதும் தேடி பார்த்தனர். நேற்று மாலை ராஜு குகைக்குள் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

அவரை மீட்பதற்காக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோர் முயற்சித்தனர். ஆனால் அவரை மீட்க இயலவில்லை. எனவே இது பற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார், தீயணைப்பு படையினருடன் வந்து ராஜூவை மீட்க முயன்றனர். ஆனாலும் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே ஜேசிபி, ஹிட்டாச்சி ஆகிய எந்திரங்களை கொண்டு வந்து குகையை சுற்றி இருக்கும் பாறைகளை அகற்றும் பணிகள் நேற்று மதிய முதல் நடைபெற்ற வருகின்றன.

மேலும் கம்ப்ரஸர் மூலம் பாறைகளை உடைத்தும் ராஜூவை மீட்க முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் அதிகாரிகள் குகையில் சிக்கி கொண்டிருக்கும் ராஜூவிற்கு குளுக்கோஸ், ஒஆர்எஸ் ஆகிய பானங்களை கயிறு மூலம் அனுப்பி கொடுத்து வருகின்றனர்.

தற்போது வரை ராஜீவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு மீட்பு பணி தொடர்பான காட்சிகளை காண ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

Views: - 269

0

0