கடன் கொடுத்த வட்டி ராஜாவை துவைத்தெடுத்த இளைஞர்கள்!! ஷாக் வீடியோ!!

28 January 2021, 7:56 pm
Attack - Updatenews360
Quick Share

ஆந்திரா : பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் பணம் கொடுத்தவர் மீது நண்பர்களுடன் வந்து தாக்கிய
சிசிடிவி காட்சிகள் வெளியகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த ஜன ஜீவன் நகரை சேர்ந்த பிரசாத் ராவ். இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் நடத்தி வருகிறார். அவரிடம் கடந்த 3 மாதங்கள் முன்பு அப்பகுதியை சேர்ந்த ஜகதீஷ், சதீஷ், அப்துல் என்ற மூன்று பேர் பணம் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு பிரசாத் ராவ் தொலைபேசியில் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தொலைபேசியில் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பதிலுக்கு பிரசாத் ராவ் ஆபாசமாக திட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 24-ம் தேதி 3 பேர் கோபமடைந்து மதுபோதையில், பிரசாத் ராவை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். அருகில் கிடந்த செங்கலை எடுத்து பிரசாத் மீது வீசியெறிந்தனர். கண்மூடித்தனமாக தாக்கியதில் படுகாயமடைந்த பிரசாத் ஒரு கட்டத்தில் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து பிரசாத் ராவ் நெல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸ், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நெல்லூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 22

0

0