மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: வீடு வீடாக சுகாதாரத் துறையினர் பரிசோதனை ..!!

Author: Aarthi
2 August 2021, 4:06 pm
Quick Share

புனே: கேரளாவை தொடர்ந்து தற்போது மஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

latest tamil news

நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பகல் பொழுதில் ஏடிஸ் வகை கொசுவால் கடிக்கப்படும் மனிதருக்கு இதன் பாதிப்பு தென்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோவிட் பெருந்தொற்று பாதிப்பின் 2வது அலையில் இருந்தே மீளாத கேரளாவில் ஜிகா வைரசின் பாதிப்பு பரவியது. அங்கு ஜிகா வைரசின் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

latest tamil news

அவரின் மாதிரிகளை பரிசோதித்ததில் ஜிகா பாதிப்புடன், சிக்குன் குன்யா வைரசாலும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் காய்ச்சல், முகத்தில் வலி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு வீடாக சுகாதாரத் துறையினர் செல்கின்றனர்.

அறிகுறி உள்ளவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Views: - 213

0

0