இந்தி-யால் வந்த சிக்கல்… வருத்தம் தெரிவித்த Zomato… ஊழியரையும் பணிநீக்கம் செய்து அதிரடி..!!!

Author: Babu Lakshmanan
19 October 2021, 12:25 pm
zomato 1 - updatenews360
Quick Share

சென்னை : வாடிக்கையாளர்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று ஊழியர் கூறியதற்கு Zomato வருத்தம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டெலிவரி தொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக சொமோட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை அணுகியுள்ளார். அப்போது, ‘இந்தி நாட்டின் தேசிய மொழி என்றும், ஆகவே அனைவரும் இந்தி மொழி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது’ என சொமேட்டோ ஊழியர் பதிலளித்துள்ளார்.

ஊழியரின் இந்த பதில் கடும் சர்ச்சையான நிலையில், சொமேட்டோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாடிக்கையாளர் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று ஊழியர் கூறியதற்கு Zomato நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது :-எங்கள்‌ வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ நடத்தைக்கு வருந்துகிறோம்‌, வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நம்‌ தேசத்தின்‌ மாறுபட்ட கலாச்சாரத்தின்‌ மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்‌ காட்டிய ஊழியரை பணிநீக்கம்‌ செய்துள்ளோம்‌. பணிநீக்கம்‌ என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்‌. மேலும்‌ மக்களின்‌ உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்‌ பகிரக்கூடாது எனத்‌ தெளிவாக நாங்கள்‌ எங்கள்‌ முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்‌.

Zomato - Updatenews360

இந்த வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ அறிக்கைகள்‌ மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின்‌ நிலைப்பாட்டைக்‌ குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள்‌ முழு பயன்பாட்டிற்காக தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌. நாங்கள்‌ ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில்‌ சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம்‌ (எ.கா. நாங்கள்‌ மாநிலத்திற்கான உள்ளூர்‌ பிராண்ட்‌ அம்பாசிடராக அனிருத்தை தேர்வு
செய்துள்ளோம்‌).

மேலும்‌ கோயம்புத்தூரில்‌ ஒரு உள்ளூர்‌ தமிழர்‌ கால்‌ சென்ட்டர்‌ / சர்வீஸ்‌ சென்ட்டரை உருவாக்கும்‌ பணியில்‌ உள்ளோம்‌. உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை நாங்கள்‌ புரிந்துள்ளோம்‌. அவை இரண்டையும்‌ நாங்கள்‌ முழுமையாக உணர்ந்துள்ளோம்‌ என மீண்டும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌, எனக் குறிப்பிட்டுள்ளது.

Views: - 274

0

0