நிர்வாணமாக நடிக்க தயார்… வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்களே நம்ம இனியா..!

Author: Vignesh
5 December 2023, 6:00 pm
iniya - updatenews360
Quick Share

தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தார்.

iniya - updatenews360

ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால், சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய இனியாவுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

iniya - updatenews360

இதனையடுத்து சன்டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். அதுபோக சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் இனியா அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். இதில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் எல்லாம் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று வாய்ப்பு கேட்டு வருகிறாராம். கவர்ச்சியை கையிலெடுக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு எதிர்பார்த்த பலனைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர்.

iniya - updatenews360

தமிழ் மொழியில் நடித்து வந்த இனியா விலங்கு வெப் தொடரில் விமலுடன் சில நெருக்கமான ஆடையில்லா காட்சிகளிலும் நடித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் திகழ்ந்து வந்த இவர் மீண்டும் ஒரு வெப் சீரியலிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

iniya - updatenews360

அதிலும், அந்த வெப் தொடரில் படு மோசமான படுக்கையறை மற்றும் ஆடை இல்லாத சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சில படங்களில் ஆடையில்லாமல் நடித்து வந்த இனியா, தற்போது துளி கூட உடையில்லாத காட்சிகளில் நடிக்க கமிட்டாகி இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வரும் இனியா இதன் பின்பு ஒரு நல்ல கேரியரை ஆரம்பிப்பார் என்று வாழ்த்தும் ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 129

0

0