இனி இன்ஸ்டாவில் இந்த விஷயம் கட்டாயமாம்!!!

Author: Hemalatha Ramkumar
6 May 2022, 7:08 pm
Quick Share

இன்ஸ்டாகிராம் தனது தளத்தில் வயது சரிபார்ப்பைக் கட்டாயமாக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இது தொடர்பாக ஒரு முடிவை இன்ஸ்டாகிராம் எடுத்துள்ளது. பிறந்த தேதியை உள்ளிடுவதை அனைத்து பயனர்களுக்கும் கட்டாயமாக்குகிறது.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாக உள்ளது.

“இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதைத் தொடரும் முன், இந்தக் கணக்கு பிஸினஸ் அல்லது செல்லப் பிராணி போன்றவற்றுக்காக இருந்தாலும் கூட, உங்கள் பிறந்தநாளை வழங்க வேண்டும்” என்று இன்ஸ்டாவின் ஒரு நோட்டிஃபிகேஷன் கூறுகிறது.

இது நம் சமூகத்தில் உள்ள டீனேஜ் வயதினரை பாதுகாக்க உதவுகிறது. விளம்பரங்கள் உட்பட உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க உதவ, உங்கள் பிறந்தநாளை பயன்படுத்த உள்ளோம். இது உங்கள் பொது சுயவிவரத்தின் (General Profile) ஒரு பகுதியாக இருக்காது.

போலி பிறந்த தேதிகள் இனி வேலை செய்யாது:
பயன்பாட்டில் பயனர்கள் போலியான பிறந்த தேதியை உள்ளிட முயற்சி செய்யலாம். ஆனால் புதிய, மேம்பட்ட, AI அடிப்படையிலான அல்காரிதம்கள் இப்போது பயனரின் துல்லியமான வயதைக் கண்டறிய முடியும்.

ஃபேஸ்புக்குடன் இணைக்கப்பட்ட ஆப்ஸ் அல்லது கேம்களில் உள்ளிடப்பட்ட உங்கள் வயதைச் சேகரிப்பது அல்லது பயனர் பெறும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகுப்பாய்வு செய்வது போன்ற கூறுகளின் உதவியுடன் இது செய்யப்படுகிறது.

இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவும் பிரத்யேக ‘Instagram for Kids’ அப்ளிகேஷனை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகள் மத்தியில் இன்ஸ்டாகிராமின் பயன்பாட்டை இந்த செயலி எவ்வாறு அதிகரிக்கும் என்பது குறித்த பல விமர்சனங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3112

0

0