நயன்தாராவின் பவுன்சர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனரா ? நடந்தது என்ன.? வெளியான வீடியோவால் பரபரப்பு.!

Author: Rajesh
29 June 2022, 10:23 am
Quick Share

தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் அண்மையில் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின் மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருப்பதி சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதினார்.

இதனிடையே, இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் நடிகர் ஷாரூக் கானை வைத்து உருவாக்கும் திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த நிலையில் தான் மும்பையில் நடிகர் ஷாருக்கானுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக நயன்தாரா சென்றிருந்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களுடன் நயன்தாராவின் பாதுகாவலர்கள் கரடுமுரடாக நடந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகி உள்ளது.

Views: - 387

0

0