வரதட்சணை கேட்டு மனைவி, மகளை கைவிட்ட கணவன்: நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி…தக்க நேரத்தில் உயிரை காப்பாற்றிய பத்திரிக்கையாளர்கள்!!

Author: Rajesh
12 May 2022, 5:30 pm
Quick Share

ராமநாதபுரம்: வரதட்சணை கேட்டு கைவிட்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்த பெண்ணை பத்திரிக்கையாளர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனது மகளுடன் நிர்கதியாய் நிற்பதாக கூறி திடீரென தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதியில், இருந்த பத்திரிக்கையாளர்கள் ஜர்னோஸ் சேது, குமார், வீரா ஆகியோர் அவர்கள் இருவரையும் சரியான நேரத்தில் காப்பாற்றினர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 633

0

0