கதீஜாவுக்கு கிடைத்த வரவேற்பு : ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா.. வீடியோ வைரல்.. !

Author: Rajesh
1 May 2022, 11:03 am
Quick Share

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர். தமிழ் மொழியில் தெறி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரம் சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.

தற்போது, இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜா கதாபாத்திரம் செம வைரல் ஆகி வரவேற்பு பெற்று வருகிறது.

காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு கதாநாயகன் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். இதனால் அவன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் வெற்றி குறித்து நடிகை சமந்தா, க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. அனைவரும் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். நீங்கள் கொடுத்த வரவேற்பு, மேசேஜ், ட்வீட், வாழ்த்துக்கள் என அனைத்திற்கும் நன்றி என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

Views: - 1109

27

2