குடிக்க தண்ணிக்கூட கிடைக்கல.. மொட்டைமாடியில் நின்று கதறிய அசோக் செல்வனின் மனைவி..!

Author: Vignesh
7 December 2023, 4:42 pm
keerthi pandian-updatenews360
Quick Share

கடந்த சில தினங்களாக மிக்ஸாம் புயல் காரணமாக வெள்ளத்தில் சிக்கி சென்னையில் பல முக்கிய பகுதிகள் இன்னும் தண்ணீரில் கொஞ்சமும் குறையாததால் மக்கள் படகு, ஜேசிபி, டிராக்டர் என பலவற்றில் சென்று பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

keerthi pandian-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்த நடிகை கீர்த்தி பாண்டியன் அவரது வலைதளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். அதில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் இருக்கும் விவேகானந்தா கல்லூரி இருக்கும் இடத்தில் நிமிடத்திற்கு நிமிடம் தேங்கி இருக்கிறது.

தண்ணீரில் சாக்கடை நீர் கலந்துள்ளது யாரும் சுத்தம் செய்ய வரவில்லை என்றும், தரைதலத்தில் இருக்கும் அனைத்து வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. 2015 வெள்ளத்தில் கூட தேங்காத தண்ணீர் தற்போது நிலைமையே தலைகீழாக மாற்றிவிட்டது.

அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளை கூட பெற வெளியில் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் குடி தண்ணீர் கூட இல்லை என்றும், 48 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமும் இல்லை தயவுசெய்து உதவுங்கள் என்று குறிப்பிட்டு அப்பகுதியில் எடுத்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் போட்ட பதிவின் மூலம் அந்த இடத்தில் தேங்கி இருந்த நீரை சரி செய்து விட்டதாகவும், நன்றி கூறியும் ஒரு பதிவையும் போட்டிருக்கிறார். இவரை போல் நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விஷால், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 178

0

0