விஜய் படத்துடன் மோதவுள்ள KGF-2 படத்திற்காக சூர்யா செய்ய போகும் செயல்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!

Author: Rajesh
27 March 2022, 1:28 pm
Quick Share

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில்இ கே.ஜி.எப் 2 திரைப்படமும் அன்றைய தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்ட பீஸ்ட் படக்குழு திரைப்படத்தை ஒரு நாளுக்கு முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. அதன்படி ஏப்ரல் 13 தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து இரண்டு படங்களுக்கான புரோமோஷன் பணிகளை அந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளது.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டதில் இருந்து, அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது KGF-2 படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி KGF- 2 தமிழ் ட்ரைலரை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 482

1

0