மக்களை முன்னிறுத்தக் கூடிய அரசு திமுக அரசு: தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த காதர் மொய்தீன்..!!

Author: Rajesh
3 May 2022, 4:30 pm
Quick Share

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போது உள்ள திமுக அரசு மக்களை முன்னிறுத்தக் கூடிய அரசாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் முன்னிலை பெற வேண்டும் என்ற அடிப்படையில் நமக்கு நாமே ஏற்பாடு செய்து நம்மில் ஒருவராக இருந்து தமிழக மக்களுக்கு சிறந்த ஒரு செயலை செய்து வரும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சரவைக்கும் மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். நமது அண்டை நாடுகளுடன் நல்லிணக்கத்தை நாட வேண்டும்.

அண்டை நாடான பங்களாதேஷ் உடன் இந்தியா ஒரு நட்புறவை பெற்று இருக்கிறது. அந்த நாட்டினுடைய ஒரு துறைமுகத்தை பயன்படுத்த அனுமதித்திருக்கிறது. நமது அண்டை நாடான இலங்கை மக்கள் படும் அவதியை தீர்க்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் என்று சொல்லாமல் இலங்கை மக்களுக்கு வழங்க சொல்லி அனுப்பி இருப்பது பெரும் உதவியாக உள்ளது.

பிரதமர் வாஜ்பாய் சொல்வார் நமது அண்டை நாடுகள் எப்போதும் நிரந்தரமானவை அண்டை நாடுகளை மாற்ற முடியாது. இலங்கை பிரச்சினையை தீர்க்க தமிழ்நாடு முன்வந்திருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு அனுமதி தந்து பிறப்பித்திருக்கிறது பாராட்டுக்குரியது. மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தி அங்கு உள்ள தீவிரவாதத்தை தடுத்து நிறுத்தும் அளவிற்கு இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டும்.

இந்தியாவுக்கு அருகில் உள்ள அண்டை நாடுகள் அத்தனையும் மிக நெருக்கமான உறவு வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தோடு உறவை ஏற்படுத்திக் கொண்டிருப்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்க கூடியது. மக்கள் பாராட்டு ஒன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.

Views: - 399

0

0