ஏர்டெல் Vs ஜியோ 349 ரூபாய் திட்டம்… இவை இரண்டில் எது சிறந்தது???

Author: Hemalatha Ramkumar
25 September 2021, 4:46 pm
Quick Share

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான திட்டங்களை வழங்குகின்றன. உண்மையில், இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும் இடையிலான கட்டண யுத்தம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ இதில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் ஏர்டெல்லின் சில திட்டங்களும் நல்ல நன்மைகளை வழங்குகின்றன.
எனவே, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வின் ரூபாய் 349 திட்டத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ திட்டம் ரூ. 349, மூலம் 28 நாட்களுக்கு சேவயை வழங்குகிறது. இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் 3 GB டேட்டாவை வழங்குகிறது. அதாவது பயனர்கள் 84 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 மெசேஜ் அனுப்பும் வசதியை பெறுகிறார்கள். ஒரு நாளைக்கு உள்ள டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 67 Kbps ஆக குறைக்கப்படும். கூடுதலாக, இந்த பேக் JioCinema, JioSecurity, JioNews, JioTV மற்றும் JioCloud உட்பட அனைத்து Jio செயலிகளுக்கும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்:
ஏர்டெல் ரூ.349 திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 GB டேட்டா (அதாவது 70 GB டேட்டா), ஒரு நாளைக்கு 100 மெசேஜ், வரம்பற்ற கால் செய்யும் வசதிகள் கிடைக்கும். இலவச ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக், ஷா அகாடமியின் ஒரு வருட படிப்புகள், அப்பல்லோ 24/7 ஆகியவை மூன்று மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் கிடைக்கும். மேலும் FASTag பரிவர்த்தனைகளுக்கு ரூ .100 கேஷ்பேக் ஆகியவை இதில் அடங்கும்.

எந்த திட்டம் சிறந்தது?
ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஏர்டெல் ரூ. 349 திட்டம் ரிலையன்ஸ் ஜியோவை வின் ரூ. 349 திட்டத்தை விட சிறந்தது. ஏனெனில் பயனர்கள் முன்னணி பயன்பாட்டான அமேசான் பிரைம் வீடியோவிலிருந்து ஒரு மாதத்திற்கு இலவசமாக சேவையை பெறுவார்கள்.

ஆனால் நீங்கள் அதிக டேட்டா வசதியை மட்டுமே தேடுகிறீர்களானால், நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்குச் செல்ல வேண்டும். மேலும் முன்னணி பயன்பாட்டில் இருந்து உள்ளடக்கப் பயன்களை விரும்பினால், ஏர்டெல் பேக்கிற்குச் செல்லவும்.

ஏர்டெல் தனது திட்டங்களின் விலையை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ எந்த பெரிய மாற்றங்களையும் செய்யவில்லை. மேலும் தீபாவளிக்கு அருகாமையில் அதன் 4G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மிகவும் மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ன் விலை ரூ. 3500 க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 130

0

0