ஹவாய் நோவா 7 SE 5 ஜி வைட்டலிட்டி பதிப்பு அறிமுகமானது | அம்சங்கள், விலை & முழு விவரங்கள்

17 October 2020, 8:44 am
Huawei Nova 7 SE 5G Vitality Edition With MediaTek Dimensity 800U Launched; Features, Price
Quick Share

ஹூவாய் நோவா 7 SE வைட்டலிட்டி பதிப்பு (Huawei Nova 7 SE Vitality Edition) நிறுவனத்தின் சமீபத்திய இடைப்பட்ட 5 ஜி-இயக்கப்பட்ட கைபேசியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசி ஹவாய் நோவா 7 தொடரில் ஏற்கனவே இருக்கும் மாடல்களுடன் சேரும். நோவா 7 SE வைட்டலிட்டி பதிப்பு 2,299 யுவானுக்கு விற்பனையாகிறது, அதாவது இது சுமார் ரூ.25,130 விலைக்கொண்டுள்ளது. 

இது சில்வர் மூன் ஸ்டார், கிஜிஜிங் ஃபாரஸ்ட் (பச்சை), மிட்நைட் பிளாக் மற்றும் மிட்சம்மர் பர்பில் போன்ற நான்கு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. அம்சங்களைப் பொறுத்தவரையில், ஹவாய் நோவா 7 SE வைட்டலிட்டி பதிப்பு சிப்செட்டைத் தவிர ஹவாய் நோவா 7 SE போன்ற விவரக்குறிப்புகளையே கொண்டுள்ளது.

ஹவாய் நோவா 7 SE 5 ஜி வைட்டலிட்டி பதிப்பு அம்சங்கள்

டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, ஹவாய் நோவா 7 SE 5ஜி வைட்டலிட்டி எடிஷன் 6.5 இன்ச் ஃபுல் HD+ LCD டிஸ்ப்ளேவுடன் செல்ஃபி கேமராவிற்கு ஒற்றை பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் வருகிறது. இதன் திரை 2400 x 1080 பிக்சல்கள் தெளிவுத்திறன் மற்றும் 20:9 விகிதத்துடன் வருகிறது. இந்த சாதனம் மீடியா டெக் டைமன்சிட்டி 800U செயலி உடன் இயக்கப்படுகிறது, அதே சிப்செட் ரியல்மீ X7 போனையும் இயக்குகிறது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி ஒற்றை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளமைவில் கிடைக்கிறது. இமேஜிங்கிற்காக, 64 MP முதன்மை கேமரா, 8 எம்.பி அகல-கோண கேமரா, 2 MP மேக்ரோ கேமரா மற்றும் கடைசியாக, 2 MP ஆழம் சென்சார் கொண்ட நான்கு-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஒரு 16MP செல்ஃபி சென்சார் உள்ளது.

ஹவாய் நோவா 7 SE 5 ஜி வைட்டலிட்டி பதிப்பு ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது, இதன் மேல் EMUI 10.1 இயங்குகிறது. தொலைபேசியில் 4000mAh பேட்டரி 40W சூப்பர்சார்ஜ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. இது பாதுகாப்புக்காக பக்கவாட்டு கைரேகை சென்சாரையும் பெறுகிறது.

இணைப்பு முன்னணியில், கைபேசியில் 5 ஜி SA / NSA, இரட்டை 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ac, புளூடூத் 5.1 LE, ஜிபிஎஸ் (L1 + L5 டூயல் பேண்ட்), NFC, யூ.எஸ்.பி டைப்-C மற்றும் இரட்டை சிம் ஆதரவு ஆகியவை அடங்கும். கடைசியாக, தொலைபேசி 162.31 x 75.0 x 8.5 மிமீ பரிமாணங்களையும், 189 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Leave a Reply