வீட்டில் தனியாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் கண்டம்துண்டமாக வெட்டிக் கொலை : திருப்பூர் அருகே பயங்கரம்… போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 2:39 pm
Real Estate Man Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தனியாக இருந்த போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்திவரும் இவர் தனது மனைவியை பிரிந்து தனது தாய் மற்றும் தந்தையுடன் சிட்கோ பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று அமாவாசை என்பதால் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்ட சூழ்நிலையில் பாலசுப்ரமணியம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் .

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாலசுப்ரமணியம் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து வீட்டில் தனியாக இருந்த பாலசுப்பிரமணியத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

கோவிலுக்கு சென்ற பெற்றோர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 972

0

0