வித்யாசமான ரோலில் கலக்கும் நயன்தாரா ” அன்னபூரணி ” ட்ரைலர் ரிலீஸ்!

Author: Shree
27 November 2023, 8:38 pm
annapoorani
Quick Share

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா தற்ப்போது ” அன்னபூரணி ” என்ற படத்தில் நடித்துள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ள படம், ‘அன்னபூரணி’.

இப்படத்தில் நயன்தாரா தனது கனவு லட்சியமான “செஃப் ” ஆசையை பல தடைகளை தகர்த்தெறிந்து ஜெயித்து காட்டுகிறார். இதில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ‘புடிச்சத பண்ணா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார்’ ஆகலாம் என நயன்தாரா நம்பிக்கையுடன் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக ராஜா ராணி படத்திற்கு பிறகு இதில் நயன்தாரா – ஜெய் ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 249

0

0