சிக்னல் கொடுக்காமல் திரும்பிய ஆம்னி வேன் : கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய பேருந்து… பதை பதைக்க வைக்கும் விபத்தின் காட்சி!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 3:39 pm
Accident CCTV - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஆதி லட்சுமிபுரம் பிரிவு அருகே செம்பட்டி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து, ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்த நிலையில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செம்பட்டி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி சொன்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி வேனை ஓட்டி சென்ற ஓட்டுநர், வலதுபுறம் எந்த ஒரு சிக்னலும் கொடுக்காமல் ஆதிலட்சுமிபுரம் பிரிவு அருகே திடீரென வேனை திருப்பியுள்ளார்.

திடீரென வேன் சாலையில் திரும்பியதால் இதனை எதிர்பார்க்காத பின்னால் வந்த தனியார் பேருந்தை கட்டுபடுத்த முடியாத ஓட்டுநர் வேனின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு வேனில் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.

மேலும் விபத்தில் ஆம்னி வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்து கடைக்குள் புகுந்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்து குறித்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியான சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

Views: - 437

0

0