ஈரோட்டில் சைசிங் மில்லில் தீ விபத்து… 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

22 March 2020, 5:37 pm
Erode fire accident
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் சைசிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது.

ஈரோடு அசோகபுரம் 16 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் இந்தப்பகுதியில் மாலினி சைசிங் மில்லை கடந்த 2 வருடமாக நடத்தி வருகிறார். இன்று ஞாயிறுக்கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனிடையே மூடப்பட்ட சைசிங் மில்லிருந்து தீ வருவதாக அருகில் இருப்பவர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கும், செல்வராஜ்க்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தீ பரவியதால் மேலும் 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இந்த தீ விபத்தில் 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.