சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது…

28 June 2020, 7:05 pm
Quick Share

திருவள்ளூர்: ஊரடங்கு விதிமுறைகளை மீறி சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட அம்சம் நகர்ப்பகுதியில் தமிழக அரசின் பொது முடக்க முழு ஊரடங்கு நாளில் சேவல் சண்டை நடத்துவதாக திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரண்டு சேவல்களை வைத்து சண்டை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர். போலீசை பார்த்தவுடன் பலர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீஸார் விட்டு சென்ற நான்கு பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் இந்திரா நகரைச் சேர்ந்த மணிவண்ணன், மணிகண்டன், அம்சா நகரைச் சேர்ந்த பாலாஜி, அமானுல்லா ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுபோல் தமிழக அரசின் உத்தரவை மீறி போட்டிகள் நடத்தி அதனால் வைரஸ் பரவலை அதிகரிக்க செய்யும் பொறுப்பற்ற இளைஞர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.