42 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்…

30 April 2020, 1:19 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 42 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

ஓசூர் அருகே பேளகொண்டபள்ளி கிராமத்தில் வினய்ரெட்டி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் குட்கா போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக மத்திகிரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள சீட்டு வீட்டில் 260 மூட்டைகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 42 லட்சம் மதிப்புள்ள 8 டன் எடையுள்ள பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்திருந்த வினய் ரெட்டி மற்றும் தினேஷ் பாபு ஆகியோரை மத்திகிரி போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மாதவன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.