ஊரடங்கு உத்தரவை மீறியதாக 63 வழக்குபதிவு…

25 March 2020, 11:14 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 63 வழக்குபதிவு செய்து 80பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் சமூக விலகல் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் ஊரடங்க விதியை மீறி வெளியே சுற்றியதாக 63 வழக்குகள் பதிவு செய்து 80 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீதி வெளியே வருபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.