ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை கண்டெடுப்பு

11 May 2020, 7:58 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூரில் 1.5 கிலோ எடையுள்ள 26 சென்டி மீட்டர் உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன ஆஞ்சநேயர் சிலையை போலீஸார் கண்டெடுத்தனர்.

ஓசூர் பகுதியில் கால்வாயில் சிலை ஒன்று இருப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் கால்வாயில் இருந்த சிலையை எடுத்து சுத்தம் செய்து பார்த்தபோது 1.5 கிலோ எடை கொண்டதாகவும், 26 சென்டிமீட்டர் உயரம் கொண்டது என்றும், ஐம்பொன்னால் ஆன ஆஞ்சனேயர் சிலை எனவும் போலீஸார் தெரிவித்தனர். இதனை மீட்ட போலீஸிர் பின்னர் வருவாய்த் துறையிடம் முறைப்படி ஒப்படைத்தனர். மேலும் ஓசூர் நகர காவல் துறையினர் ஐம்பொன்னாலான சாமி சிலையை யார் கால்வாய்களில் எரிந்தவர்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.