அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு…

24 March 2020, 1:39 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளிமாவட்டத்தினருக்கு கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுப்பப்படுகின்றனர்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இதேபோல ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது மற்றும் மக்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அனுப்பப்படுகின்றனர். இதில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.