ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடல்…

21 March 2020, 6:25 pm
Quick Share

ஈரோடு: கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளது.

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் நடுநடுங்க வைத்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரேனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்ஒருபகுதியாக தமிழகத்தில் தியேட்டர்கள், மால், வழிபாட்டு தலங்கள், ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் மூடப்பட்டது.

இந்நிலையில் ஈரோட்டில் இயக்கி வரும் சுமார் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 31 ம் தேதி வரை மூடப்படும் என ஈரோடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் மீட்டர் உற்பத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 பேர் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.