தொழிலதிபரிடம் கத்தியைகாட்டி மிரட்டி பணம் மற்றும் நகை பறிப்பு…

23 May 2020, 7:03 pm
Quick Share

கோவை: கவுண்டம்பாளையம் அருகே தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை மர்மகும்பல் ஒன்று கத்தியைகாட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர்.நகரை சேர்ந்த பிரதீப் குமார் (37) தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதோடு, இருசக்கர மற்றும் பழைய நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரதீப்குமாரை வடவள்ளி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி சத்தியா என்பவர் தொடர்பு கொண்டு தனக்கு பழைய இருசககர வாகனம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதேசமயம் போதிய பணம் இல்லாத காரணத்தால், வடவள்ளி என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். இதனையடுத்து சாந்தி தனது வீட்டில் வந்து பணத்தைப்பெற்றுக்கொள்ளமாறு கூற, பணத்தைப்பெற சத்தியாவும்,பிரதீப்குமாரும் சாந்தியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது சாந்தியின் வீட்டிற்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், தங்களை போலீஸ் எனக்கூறியதோடு, மூவரையும் கீழேதள்ளியது. மேலும் சத்தியா மற்றும் பிரதீப் ஆகிய இருவரையும் வீட்டின் சமையலறைக்குள் தள்ளிய கும்பல், கத்தியைகாட்டி மிரட்டி ஆடைகளை கலையவைத்து ஆபாசாமாக படம் எடுத்ததோடு, அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி மூவரிமிருந்தும் 12 பவுன் நகைகள், ஒரு செல்போன், 8,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து மாயமானது. இது குறித்து வடவள்ளி பதிவு செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பு ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.