வரும் 6ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மதுரை வருகை… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

31 July 2020, 10:04 pm
Quick Share

மதுரை: வருகிற ஆறாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து இதுவரை செய்துள்ள கொரோனா பணிகளை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை வடபழஞ்சி பகுதியில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதவாது:- கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிகிச்சைக்குப் பின் முழு குணம் அடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து முழுவதும் மீண்டு வந்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மதுரை மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர்க்கு 5 சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தற்சமயம் மதுரை மாவட்டம் வடபழ்ஞ்சில் மூன்று அடுக்குகளில் கொண்டுள்ள இந்த அடுக்கு மாடியில் இதில் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. காய்ச்சல் கண்டறியும் முகாம் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது இதுவரை 7500 காய்ச்சல் முகாம்கள் மதுரையில் செயல்பட்டு வருகிறது.

மிக விரைவில் தமிழகத்தின் முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார். தொற்றினால் ஏற்படும் மரணங்களை மறைப்பதற்கு அரசுக்கு தேவையில்லை. தொற்று மற்றும் பல்வேறு நோய்களோடு உள்ளவர்கள் மட்டுமே சிகிச்சை பலனின்றி இறக்க கூடிய வாய்ப்பு என்பது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், இந்த நோய்க்கு மருந்து கிடையாது தனித்து இருக்கனும் விழித்து இருக்கனும் என்பதே மருந்து. வைரஸ் தொற்று வந்தாலும் பயப்படக்கூடாது. இந்த நோயைப் பொறுத்தவரையில் எந்த வித அச்சமும் தேவையில்லை. வந்துவிட்டது என்றால் நாம் தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலே போதும். யோகா செய்தாலே போதுமானது இந்த நோயை விரட்டிவிடலாம். என்றார்.