சத்தியமங்கலத்தில் கொரோனா? வதந்தியால் பீதி..! (வீடியோ)

26 March 2020, 4:53 pm
Sathy Corona Rumors - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் கொரோனா பரவியதாக வதந்தி பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழக அரசு பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது மேலும் மத்திய மாநில அரசு சார்பில் தற்போது தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் நபர்களை கண்டறிந்து சுகாதாரத்துறை சார்பில் அவர்கள் வசிக்கும் வீட்டின் முன்புறம் கொரோனா தொற்று உள்ளே நுழையாதே தனிமைப்படுத்தப்பட்ட வீடு என லேபிள்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதை தவறாக புரிந்துகொண்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சிலர் கொரோனா வைரஸ் சத்தியமங்கலத்தில் பரவி உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் லேபிள்களை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புபவர்களை ஈரோடு மாவட்ட காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும் இது போன்ற செயலில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சத்தியமங்கலம் காவல்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.