ஈரோட்டில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

22 March 2020, 2:07 pm
Erode sucied-updatenews360
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்கள். அவர்களுடைய ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்ததில் இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு தொடர்ந்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் வசிப்பவர்கள் உள்ளவர்களையும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவருடைய நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் குடும்பம் மற்றும் அருகாமையில் உள்ள குடும்பங்களை வீட்டின் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க தனி வார்டு அமைக்கப்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.