“எல்லாரும் வெளில வந்து ரன்-அவுட் ஆகிடாதீங்க” – ரவீந்திர ஜடேஜாவின் ஸ்டைலான அட்வைஸ்…!

27 March 2020, 11:51 am
Quick Share

உலகமெங்கும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தற்போது தலையோங்கி இருக்கும் இந்த கொரோனா வைரஸ் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நம்மளை வாட்டி எடுக்குமென்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அது 24000 பேரின் உயிர்களை சூறையாடி வலம் வருகிறது.


இந்நிலையில் இந்த கொரோனா வைரஸைப்பற்றிய விழிப்புணர்வை பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய பாணியில் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை ஆல் ரவுண்டர் நட்சத்திரமான ரவீந்திரா ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினிற்கு அடுத்து ஒரு ஸ்டைலான ரன் அவுட் மூலம் விழிப்புணர்வை கூறியுள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியா அணிக்குமிடையே நடைப்பெற்ற இரண்டாவது ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா ரன் ஓட நினைக்கும் போது ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்துவிடுவார். அந்த வீடியோவை பகிர்ந்து ” எல்லாரும் வெளில வந்து ரன்-அவுட் ஆகிடாதீங்க” என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply