தமிழ்நாடு நவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேரணி மற்றும் சிறை நிரப்பும் போராட்டம்…

18 March 2020, 1:39 pm
Quick Share

கிருஷ்ணகிரி: மத்திய அரசு உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு நவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  பேரணி மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிருஷ்ணகிரியில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி  கிருஷ்ணகிரி கோட்டைப்பகுதி பகுதியில் இருந்து தேசியக் கொடியுடன் தமிழ்நாடு நவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பேரணியாக வந்த இஸ்லாமியர்கள் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முகம்மத் அயாஸ் தலமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானர் கலந்துக் கொண்டு மத்திய அரசின் போக்கினை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் உடனடியாக மத்திய 80 நாள்களை கடந்து தமிழத்தில் இப்போராட்டம் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ஆகையால் மத்திய, மாநில அரசுகள் இஸ்லாமிமியர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு சட்டமன்றத்தில் உடனடியாக NPR-க்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினார்.