மகன்களோடு தீ குளிக்க முயற்சித்த பெண்…

16 March 2020, 3:57 pm
Krishnairi LAdy Sucied - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்ர பெண் ஒருவர் இரண்டு மகன்களோடு தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதிநாள் நடைபெற்றது. அப்போது ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணும் 9 வயதுள்ள இரு மகன்களோடு மறைத்து எடுத்து வந்த மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து கொள்ள முயற்சித்தார்.
இதை கண்ட காவல்துறையினர் அந்த பெண்னை மீட்டனர். இது குறித்து மினாட்சி கூறுகையில், கடந்த 10 வருடத்திற்க்கு முன் தன்னை எம் செட்டிப் பள்ளியை சேர்ந்த லாரி ஒட்டுநர் சுப்ரமணி என்பவரோடு திருமணமானதாகவும் சதிஸ்குமார், சுதர்சன் என இரு மகன்கள் உள்ளதாகவும், கணவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து சித்ரவதை செய்வதாகவும்,

கடந்த 2017 வருடம் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் இருவருக்கும் விவாகரத்து சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், அங்குள்ள வழக்கறிஞர் ஒருவர் வழக்கு நடத்த வேண்டும் என்றால் என் ஆசைக்கு இணங்கு என கூறி மிரட்டியதால் மனமுடைந்து பிள்ளைகளோடு தீ குளிக்க முயன்றதாக கூறினார். இதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, பெண்ணின் வாக்குமூலத்துத்தை பதிவு செய்து சம்மந்தபட்வர்கள் மீது விசாரனை நடத்திநடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண்ணின் வாழ்வாதாரத்திற்க்கு பணி வழங்க உத்தரவிட்டார்.