கார் மீது மோதாமல் இருக்க மேம்பாலத்தின் மீது மோதிய கண்டெய்னர் லாரி…

20 March 2020, 1:11 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் லாரி மேம்பாலத்தின் மீது மோதிய விபத்தில் லாரி ஒட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் பகுதியிலிருந்து கோவையை நோக்கி கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தருமபுரி பகுதியை சேர்ந்த வேலு என்பவர் லாரியை ஒட்டி வந்தார். அப்போது கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே லாரி வந்த போது கார் ஒன்று லாரி மீது மோதும் வகையில் வந்ததால் கண்டெய்னர் லாரியை விபத்தில் இருந்து தப்பிக்க இடதுபுறம் திருப்பியுள்ளார். இதில் மேம்பாலத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானானது.

இந்த விபத்தில் ஒட்டுநர் வேலு பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வேலுவை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்குள்ளான லாரியை கிரேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.