லாரி மோதி தலைமை காவலர் உயிரிழப்பு…

7 May 2020, 1:18 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூரில் பணியில் இருந்த தலைமை காவலர் மீது லாரி மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓசூரில் தமிழக கர்நாடக எல்லை பகுதியான ஜிஜி வாடி.பகுதியில் போக்குவரத்து தலைமை காவலர் சேட்டு என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது லாரி ஒன்று வேகமாக வந்து.சேட்டு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலே தலை நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து சிப்காட் காவல்துறையினர் லாரி ஒட்டுநரை கைது செய்தனர். ஜிஜி வாடி பகுதியில் பணியில் உள்ள காவலர்கள் உட்காருவதற்கு கூட இடவசதி இல்லாததால் அங்கு பணியில் உள்ள காவலர்கள் மிகவும் சிரமபடுவதாகவும், மாவட்ட நிர்வாகம் வசதி செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.