தமிழக – ஆந்திரா எல்லைகளில் காவல்துறையினர் ரோந்து பணி…

21 March 2020, 4:26 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக எல்லைகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ளதால், இரு மாநில எல்லை பகுதியில் வரும் அத்தியாவசிய வாகனங்களுக்கு கிருமிநாசினி மருத்து தெளிக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைபேன்று வேப்பனப்பள்ளி அருகே உள்ள தமிழக – கர்நாடக எல்லையான நேராலகிரி வாகனசோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் வரும் வாகனங்களுக்கு மருத்துவ அலுவலர்கள் கிருமிநாசினி தெளித்து, வாகனங்களில் வருவோர்க்கு விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினர். இதேபோல் தமிழக – ஆந்திர மாநில எல்லையான காளிக்கோவில் பகுதியில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். குப்பம் பகுதியிலிருந்து காரில் சுற்றுலா வந்த அருணாச்சல பிரதேசத்தைவர்களை போலீசார் அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பிவைத்தனர். மாவட்டத்திள்ள 14 சோதனை சாவடிகளிலும் மருத்துவ துறையினரும், காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவது குறிப்பிடதக்கது.