கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்ட அதிகாரிகள்…

25 March 2020, 3:30 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கையான மின்மோட்டார் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாவட்ட திட்ட அலுவலர் நேரில் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கொரான வைரஸ் தொற்றுதடுப்பு பணியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் உத்தரவின் பேரில்மாவட்ட நிர்வாகம் அனைத்துதுறை அலுவலர்களையும் முழுவீச்சியில் ஈடுபடுத்தி வருகின்றது. பொதுமக்கள் கொரானா தொற்று பரவாமல் இருக்க நகரின் முக்கிய பகுதியான கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தில் மோட்டார் மூலமாக பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும் பணி துவங்கபட்டது.

மாவட்டத்திலுள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையம், வங்கிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகங்கள் பகுதிகளில் பூச்சிகொள்ளி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுபிரியா, உமாமகேஸ்வரி, ஊராட்சி மன்றதலைவர் கயாத்திரி தேவிகோவிந்தராஜ், துணை தலைவர்செல்விபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.