சென்னையில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து உதகையில் கடைகள் அடைப்பு…

15 February 2020, 12:57 pm
Ooty Shops CLosed - updatenews360
Quick Share

நீலகிரி: சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் தடியடி நடத்தியதை கண்டித்து உதகையில் இன்று இஸ்லாமிய வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

குடியுரிமை சட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புப் போராட்டங்களும் மறுபுறம் ஆதரவு பேரணியும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.எதிர்ப்பு பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டங்களில் பெண்கள் முதல் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக மற்றும் ஜனநாயக வழியில் போராடிய பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையை கண்டித்து உதகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திவரும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தையும் அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.