மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நோயாளி பலி… ஆத்திரத்தில் செவிலியர்களை தாக்கிய உறவினர்கள்…

22 May 2020, 3:25 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு செவிலியர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில் தனியாருக்கு சொந்தமான டி.சி.ஆர். மல்டிஸ்பெசள் இயங்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த மாதப்பன் என்பவரின் மகன் ஜெயராமன் இளைஞர் குடும்ப தகராறில் பூச்சு கொல்லி மருத்துசாப்பிட்டு மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்வதாற்காக கிளம்பி உள்ளார். அப்போது ஜெயராமன் மயங்கி விழவே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராமன் உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த இளைஞனின் உறவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் வாக்குவாதம் முற்றியதையடுத்து மருத்துவமனைக்குள் நுழைந்து செவிலியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த போலீசார் செவிலியர்களை தாக்கிய 4 பேரை கைது செய்தனர். இதைதொடர்ந்து ஜெயராமனின் உறவினரிடம் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் கிருஷ்ணகிரி பகுதி முழுவதும் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.