புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்க உயர்வு… அமைச்சர் தகவல்…

23 May 2020, 5:23 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் படிப்படியாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு இன்று மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானதால் மாநிலத்தில் பாதிப்பு 36 ஆக உயர்ந்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசுகையில், இன்று மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் 25 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், வெளியூர்களில் இருந்து வருபவர்களால் தான் இந்த தொற்று அதிகரித்து வருவதாகவும்,

கொரோனா தொற்று தாக்கம் உயராமல் பாதுகாக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று புதிதாக மூவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து புதுச்சேரியில் பாதிப்பு 36 ஆக உயர்ந்துள்ளது, 11 பேர் ஏற்கனவே குணமடைந்துள்ளார்கள். காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் உள்ளது.