புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பு அபாயம்… தூண்டில் வலைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை…

21 July 2020, 6:52 pm
Quick Share

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பு அபாயம் உள்ளதால் தூண்டில் வலைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது புதிய கல்பாக்கம் மீனவர் பகுதி. இப்பகுதிக்கு அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தபட்டு தற்போது இரண்டாம் அலகு துவங்கப்பட உள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கடலில் கொட்டப்பட்ட பறைகள், பெரிய கற்கல் கடலில் இருந்து அடித்து வரப்பட்டு கரை பகுதியில் வந்து குவிந்துவிடுகிறது. இதனால் மீன்பிடிக்க செல்லும் படகுகள் கடலில் கவிழ்த்து விடுகிறது. வலைகள் படகுகள் சேதமடைவதுடன் மீனவர்கள் படுகாய மடைகிறார்கள். மேலும் குடிநீர் திட்டம் செயல்படுத்தபடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பாடாமல் இருக்கும் வகையில் தூண்டில் வலைவு அமைத்து உள்ளனர்.

இதனால் கடல் நீர் தற்போது புதுக்கல்பாக்கம் மீனவர் பகுதியை தாக்க துவங்கிவிட்டது. தற்பேறு குடியிருப்பு பகுதியில் கடல் அரிப்பு எற்பட்டு படகுகள் நிறுத்த இடம் இல்லமல் அவதிபட்டு வருகிறார்கள். குடியிருப்பு பகுதிக்கு சுமார் 500 மீட்டர் தூரம் இருந்த கடல் தற்போது 30 அடி தூரத்தை நெருங்கிவிட்டது. ஒருசில நாட்களில் கடல் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு மீனவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் புதிய கல்பாக்கம் மீனவர் பகுதிக்கு தூண்டில் வலைவு அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் மீனவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.