சொந்த செலவில் மாஸ்க் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யும் தன்னார்வலர்…

23 March 2020, 5:23 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலத்தில் சொந்த செலவில் மாஸ்க் தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வரும் தன்னார்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதனை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்ல வேண்டாம் எனவும் அப்படி செல்லும் பட்சத்தில் மாஸ்க் அணிந்து செல்லுமாறும் தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

மேலும் மருந்தகங்களில் மாஸ்க் குறைந்த அளவே இருப்பதால் மாஸ்க் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதபாளையம் பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் மூர்த்தி என்பவர் தன்னுடைய சொந்த செலவில் காட்டன் துணிகளை பயன்படுத்தி சுமார் 3000 திற்கும் மேற்பட்ட மாஸ்க் தயாரித்து காவல்துறையினர்கள், செவிலியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் துப்புரவாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இலவசமாக மாஸ் வினியோகம் செய்து வருகிறார் வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட மக்கள் தவித்து வரும் வேளையில் இலவசமாக மாஸ்க் வினியோகம் செய்யும் தன்னார்வலர் மூர்த்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.