சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை…

21 March 2020, 11:09 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் மூன்று மணிநேரம் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது கோடை காலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது பின்னர் இரவு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரம் விடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஓடியது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டிவந்த நிலையில் இன்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது. பல நாட்களுக்குப் பிறகு மழை பெய்ததால் சத்தியமங்கலம் பகுதி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.