மினி லாரியில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள்… போலீசார் சோதனையில் அம்பலம்…

9 May 2020, 2:52 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 6 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்காவுடன் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பான்பராக். ஹான்ஸ். உள்ளிட்ட போதைவஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது பையனப்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரியை நோக்கி வந்த மினி லாரியை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒடி தலைமறைவானர்.

இதனால் சந்தோகமடைந்த போலீசார் மினி லாரியை ஆய்வு செய்தனர். அதில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மினி லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாகன பதிவெண்ணை வைத்து லாரி உரிமையாளர் மற்றும் ஒட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைபற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 6 லட்ச ரூபாய் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.