இன்று மாலைக்குள் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும்; மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பேட்டி…

21 March 2020, 1:58 pm
Quick Share

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் இருந்து கர்நாடகவிற்கு வரும் பேருந்துக்கள் இன்று மாலைக்குள் முழுமையாக நிறுத்தப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜூஜூவாடி தமிழக – கர்நாடக மாநில எல்லைபகுதியாக இருந்து வருவதல், தமிழக அரசின் உத்தரவின்படி கர்நாடகாவிலிருந்து வரக்கூடிய அத்தியாவசியமான வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மீண்டும் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு வரும் பேருந்துகளில் உள்ள பயணிகளும், வாகன ஓட்டிகளும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகாகவே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூஜூவாடியில் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், அதிகாரிகளுக்கு நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவு படி மாநில எல்லைகளில் உள்ள சாலைகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. ஒசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையான ஜூஜூவாடியில் தமிழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து வாகனங்களில் அத்தியாவசியமான சரக்கு வாகனங்களை தவிர்த்து மற்றவை திருப்பி அனுப்பப்படுகின்றன. பொதுமக்களின் நலனுக்காக இதுவரை குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகாகவே அனுமதிக்கப்படுகின்றனர். இன்று மாலைக்குள் படிபடியாக பேருந்துகள், போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும். பெங்களூரு மாவட்ட ஆட்சியரும் தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்கள் கர்நாடக பகுதியிலேயே செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.