வாலிபர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

22 March 2020, 1:59 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ராம். இவர் ஈரோடு ஈவி என் சாலையிலுள்ள பழமுதிர்ச்சோலை கடந்த நான்கு நாட்கள் முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கும் கடை நிர்வாகம் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சக ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென ராம் மூன்றாவது மாடியில் இருந்து திடீரென குதித்துள்ளார். இதில் ரராம் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.