கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் ஆய்வு

25 July 2020, 11:37 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 400க்கும் அதிகமானோர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வருவாய் கோட்டாச்சியர், வட்டாச்சியர், ஜி.அரியூர் மேம்பட்ட ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர், திருக்கோவிலூர் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யவும் அவர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கப்படும் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ளவர்களுக்கு முறையாக மருத்துவம் உணவு பொருட்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.